விசுவக்குடி அணையில் ரூ.2 கோடியில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள விசுவக்குடியில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா புதிய அணையை திறந்து வைத்தார்.

Update: 2019-01-23 22:30 GMT
வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள விசுவக்குடியில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா புதிய அணையை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து இந்த அணைக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வரத் தொடங்கினர். ஆனால், சுற்றுலா பயணிகளுக்கு கழிப்பறை மற்றும் இதர தங்கும் வசதிகள் எதுவும் அங்கு இல்லை. எனவே சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்கா, கழிப்பிட வசதிகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் செய்து தரவேண்டும் என அந்த பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து தமிழக சுற்றுலாத்துறை சார்பில் ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ஆண் மற்றும் பெண்களுக்கான தனித்தனி கழிப்பறைகள், கண்காணிப்பு கோபுரம், சுற்றுலா பயணிகள் இளைப்பாறும் கூடம், வாகனங்கள் நிறுத்தும் இடம், ஆழ்துளை கிணறுடன் கூடிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் இணைப்புச் சாலை ஆகிய மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த பணிகளுக்கான தொடக்க விழா விசுவக்குடி அணையின் முன்புறம் நடைபெற்றது. விழாவிற்கு எம்.எல்.ஏ.க்கள் ராமச் சந்திரன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். இதில் மாவட்ட சுற்றுலாத் துறை உதவி அலுவலர் வரதராஜன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்