காஞ்சீபுரம் மாவட்டத்தில் திருட்டு வழக்கில் 5 பேர் கைது

காஞ்சீபுரம் மாவட்டத்தில் திருட்டு வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-01-27 22:00 GMT
செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த பாலூர் பகுதியில் பாலூர் போலீசார் நேற்று ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேப்படும்படி 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் அந்த பகுதியில் உள்ள கோவில்களில் உள்ள உண்டியலை உடைத்து திருட்டில் ஈடுபட்ட நபர்கள் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் சிங்கபெருமாள்கோவிலை அடுத்த செட்டி புண்ணியம் ஊராட்சியை சேர்ந்த விமல்ராஜ் (வயது 26), செட்டி புண்ணியம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த பாலாஜி (24), ஆப்பூரை சேர்ந்த ஆனந்தராஜ் (24) என்பது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் கூவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு கிழக்கு கடற்கரை சாலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் அங்கு நின்று கொண்டிருந்த 2 நபர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கியாஸ் அடுப்பு ரிப்பேர் தொழில் செய்யும் ரமேஷ் (45) மற்றும் மரக்காணம் பகுதியை சேர்ந்த சுதாகர் (39) என்பதும் அவர்கள் கடந்த 25-ந்தேதி கல்பாக்கம் அடுத்த பெருந்துறவு கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடி சென்றவர்கள் என்பதும் தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்