நெல்லை மாவட்டத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

Update: 2019-01-28 21:30 GMT
நெல்லை,

ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் செல்வராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பள்ளி செயலர் தேவராஜன் வாழ்த்தினார். பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். விழாவில் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்டம், சாரண இயக்கம், இளையோர் செஞ்சுலுவை சங்க மாணவர்கள் அணிவகுப்பு நடைபெற்றது. விழாவில் ஆசிரியர் சீதாராமன், ஆசிரியைகள் மைதிலி, மணிவள்ளி, சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முத்துவேலன் நன்றி கூறினார்.

ராதாபுரம் என்.வி.சி. அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு, தலைமை ஆசிரியை பாக்கியவதி பிளாரன்ஸ் தலைமை தாங்கி கொடி ஏற்றினார். சிறப்பு விருந்தினராக பள்ளியின் பொருளாளர் கோவிந்தன் கலந்து கொண்டார். முதுகலை பொருளாதார ஆசிரியர் ஜேசுராஜ் சிறப்பு உரையாற்றினார். என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் ஜிம்சால்ட்டர் மற்றும் ஆங்கில ஆசிரியர் தனபால் ஆகியோர் பேசினர். டைட்டஸ் தவமாலை நன்றி கூறினார். விழாவில் ஆசிரியர் மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

விக்கிரமசிங்கபுரம் அன்னை ஜோதி சிறப்பு பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு லயன் மூர்த்தி தலைமை தாங்கி கொடியேற்றினார். விழாவில் சிறப்பு விருந்தினராக நல்லமுத்து கலந்து கொண்டார். மாணவ-மாணவிகள் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிர்வாகி ஜெயபிரகாஷ், செயலாளர் செல்வகுமார் ஆகியோர் நன்றி கூறினர்.

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொடக்கப்பள்ளியில் நடந்த விழாவுக்கு, தேயிலை தோட்ட நிர்வாக உதவி மேலாளர் ஷானவாஸ் நாயக் தலைமை தாங்கினார். மாஞ்சோலை ஆஸ்பத்திரி டாக்டர் ஆஷிஷ்குமார், பள்ளிக்கூட செயலாளர் சுதாகரன், அம்பை அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரி ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தேசியக்கொடி ஏற்றி, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியை காந்தி, மாஞ்சோலை மக்கள் நலச்சங்க தலைவர் செல்லத்துரை, செயலாளர் வெஸ்லி, துணைத்தலைவர் சங்கரநாராயணன், பொருளாளர் சந்திரசேகரன் மற்றும் மாணவ-மாணவிகள், முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பாளையங்கோட்டை புறநகர் வட்டார கல்வி அலுவலகத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. கலைச்செல்வி தேசிய கொடியேற்றினார். விழாவில் வட்டார கல்வி அலுவலர் முருகன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ்.பொறியியல் கல்லூரியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. ஸ்காட் கல்வி குழுமங்களின் பொது மேலாளர் இக்னேஷியஸ் சேவியர் தலைமை தாங்கி பேசினார். கல்லூரி முதல்வர் ஜாய் வின்னி ஒய்ஸ் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றினார். விழாவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கல்லூரி வளாக மேலாளர் சகாரியா காபிரியேல் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் வடபகுதி பொதுநலச்சங்கம் சார்பில் கிரசண்ட்நகர் சமுதாயநலக்கூடத்தில் நடந்த விழாவில் சங்க தலைவர் சுப்பையா தேசிய கொடியேற்றினார். விழாவில் கீழநத்தம் ஊராட்சி செயலர் இசக்கிமுத்து, முத்தையா மற்றும் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்