4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

ஓசூர் அருகே 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Update: 2019-01-30 22:45 GMT
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கெலவரப்பள்ளியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் மயிலீஸ் (வயது 50). தொழிலாளி. இவர் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13-ந் தேதி, அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மயிலீசை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

நேற்று விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில், மயிலீசுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜரானார்.

மேலும் செய்திகள்