சவுதி அரேபியாவில் விபத்து: பலியானவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் கலெக்டரிடம் மனு

சவுதி அரேபியாவில் நடந்த விபத்தில் பலியானவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

Update: 2019-01-31 22:45 GMT
நாகர்கோவில்,

புலம் பெயர்வோர் நலன் காக்கும் அமைப்பு நிர்வாகிகள் சகுந்தலா மற்றும் மேரி ஏஞ்சல் தலைமையில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 26-ந் தேதி சவுதி அரேபியாவில் கட்டுமான பணிக்காக சென்ற குமரி மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் குமரி மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன், வில்சன், அஜித் மற்றும் லாரன்ஸ் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். எனவே இவர்களது உடலை சொந்த ஊர்களுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறிப் பட்டு இருந்தது.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு (ரெட் ஸ்டார்) கட்சியின் மாவட்ட செயலாளர் பால்ராஜ் தலைமையில் நிர்வாகிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், கடந்த 22-ந் தேதி ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது பொதுமக்கள், மாணவர்கள் நலன் கருதி போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. எனவே ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும், அவர்கள் மீதான வழக்குகளை நீக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்