கெரகோடஅள்ளியில் அமைச்சர் கே.பி.அன்பழகன் மகன் திருமண வரவேற்பு விழா எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் நேரில் வாழ்த்து

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மகன் திருமண வரவேற்பு விழா கெரகோடஅள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை நேரில் வாழ்த்தினார்கள்.

Update: 2019-02-01 23:00 GMT
தர்மபுரி,

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான கே.பி.அன்பழகன்- மல்லிகா ஆகியோரின் மகன் டாக்டர் ஏ.சந்திரமோகனுக்கும், சென்னையை சேர்ந்த ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. மேலாளர் என்.சிவசங்கரன்-பத்மா ஆகியோரின் மகள் டாக்டர் எஸ்.வைஷ்ணவிக்கும் கடந்த 23-ந்தேதி திருப்பதி திருமலையில் திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து திருமண வரவேற்பு விழா தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள கெரகோடஅள்ளி தானப்ப கவுண்டர் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவுக்கு தமிழக முதல்-அமைச்சரும் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை தாங்கி மணமக்களை வாழ்த்தினார்கள். இந்த விழாவில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், சி.வி.சண்முகம், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கடம்பூர்ராஜூ, செல்லூர் ராஜூ, எம்.சி. சம்பத், வெல்லமண்டி நடராஜன், கே.சி.வீரமணி, டாக்டர் விஜயபாஸ்கர், டாக்டர் சரோஜா, உடுமலை ராதாகிருஷ்ணன், மணிகண்டன், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோரும் நேரில் வாழ்த்தினார்கள்.

இதேபோன்று சி.பொன்னையன், வைகைசெல்வம், நத்தம் விஸ்வநாதன், தளவாய் சுந்தரம், எஸ்.செம்மலை உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகர், தர்மபுரி நகர முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாநில விவசாய அணி தலைவர் டி.ஆர்.அன்பழகன் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அனைத்துகட்சி பிரமுகர்கள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் என ஆயிரக்கணக்கானோர் விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

இந்த திருமண வரவேற்பு விழாவிற்கான ஏற்பாடுகளை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் மல்லிகா அன்பழகன், என்ஜினீயர் ஏ.சசிமோகன், ஒப்பந்ததாரர் பி.ரவிசங்கர், ஏ.வித்யாரவிசங்கர் ஆகியோர் மேற்பார்வையில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்