வேளச்சேரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பன்றி காய்ச்சல் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வேளச்சேரியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்றது.

Update: 2019-02-05 22:15 GMT
சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி, சுகாதாரத்துறை சார்பில் பன்றி காய்ச்சல் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பன்றி காய்ச்சல் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வேளச்சேரியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்றது. கைகளை சோப்பு போட்டு கழுவுவதன் மூலம் பன்றி காய்ச்சல் மற்றும் பல தொற்று நோய்களை தடுக்க முடியும். இதனால் கைகளை தொடர்ந்து கழுவுவது குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது. இதைப்போல் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள் குறித்தும் விளக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து வணிக வளாகத்துக்கு வந்த பொதுமக்கள் மற்றும் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கும் துணிப்பைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுகாதார கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன், சுகாதார ஆய்வாளர் குணசீலன் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்