வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவன தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

வாலிநோக்கம் உப்பு நிறுவன தொழிலாளர்கள் சாயல்குடி அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2019-02-06 22:30 GMT

சாயல்குடி,

சாயல்குடி அருகே வாலிநோக்கம் உப்பு நிறுவன தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் சிவாஜி தலைமை தாங்கினார். உப்பு நிறுவன சங்க தலைவர் பச்சமால், செயலாளர் குமரவடிவு, பொருளாளர் முருகன், துணைத்தலைவர் ராஜேந்திரன், செயற்குழு உறுப்பினர் குஞ்சரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 ஆர்ப்பாட்டத்தின் போது சங்க நிர்வாகிகள் கூறுகையில், “தீபாவளிக்கு போனஸ் வழங்காததை கண்டித்து 19 நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது, 10 சதவீத போனஸ் தொகையை பொங்கலுக்கு முன்பாக தருவதாக நிர்வாகத்தினர் கூறியிருந்தனர். ஆனால் பொங்கல் முடிந்து 20 நாட்களாகியும் இன்னும் போனஸ் தொகை வழங்கப்படவில்லை. எனவே போனஸ் வழங்கும் வரை பணிகளுக்கு தொழிலாளர்கள் வருவதில்லை என முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்