மாவட்டத்தில் 3,373 பேருக்கு காசநோய் பாதிப்பு - கலெக்டர் தகவல்

மாவட்டத்தில் 3,373 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கலெக்டர் அன்பு செல்வன் தெரிவித்தார்.

Update: 2019-02-11 21:45 GMT
கடலூர்,

காசநோயை கண்டறியும் வசதியுடன் கூடிய நவீன வாகனத்தை காசநோய் தினத்தன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனம் மூலம் வருகிற 16-ந்தேதி வரை கிராமங்களில் காசநோய் பரிசோதனை மற்றும் எச்.ஐ.வி. விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இதனை கடலூரில் கலெக்டர் அன்புசெல்வன் நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 3,373 பேர் காசாநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுகிறார்கள். வருகிற 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலுமாக ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

அப்போது இணை இயக்குனர்(நலப்பணிகள்) ஆர்.கலா, துணை இயக்குனர்(காசநோய்) கருணாகரன் டாக்டர்கள் அன்பு செல்வி, தேவானந்த் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

காநோய் கிருமியை கண்டறியும் வசதியுடன் கூடிய இந்த வாகனம் மூலம் இன்று(செவ்வாய்க்கிழமை) பாலக்கொல்லை, கார்கூடல், சி.கீரனூர் கிராமங்களிலும், நாளை(புதன்கிழமை) கருவேப்பிலங்குறிச்சி, கிளிமங்கலம், பெண்ணாடம் ஆகிய ஊர்களிலும், 14-ந்தேதி கழுதூர், ரெட்டாக்குறிச்சி, அரியநாச்சி, மலையனூர் ஆகிய இடங்களிலும், 15-ந்தேதி வடக்குப்பாளையம், மாங்குளம் மற்றும் வானமாதேவியிலும், 16-ந்தேதி கொத்தங்குடி தோப்பு, சிதம்பரம் அம்பேத்கர் நகர், பெரியப்பட்டு ஆகியவற்றிலும் எச்.ஐ.வி. மற்றும் காசநோய் பரிசோதனை முகாம் நடத்தப்பட உள்ளது.

மேலும் செய்திகள்