நாகையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வருமான வரி துறையினர் சோதனை

நாகையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர்.

Update: 2019-02-12 23:00 GMT
நாகப்பட்டினம்,

நாகை நீலா தெற்கு வீதியில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் முறையாக வருமான வரி செலுத்தவில்லை என புகார்கள் எழுந்தன. இதையடுத்து நேற்று தஞ்சை, திருவாரூர், கும்பகோணம் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த வருமான வரிதுறை அதிகாரிகள் இந்த நிறுவனத்தில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது யாரையும் நிறுவனத்துக்குள் அதிகாரிகள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் நிறுவனத்துக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


நேற்று காலை முதல் இரவு வரை நடைபெற்ற இந்த சோதனையில் வரிஏய்ப்பு செய்ததற்கான எந்த ஆவணங்களும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரி துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

அதேபோல வேளாங்கண்ணியில் உள்ள ஒரு விடுதியிலும் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர். நேற்று மதியம் 3 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு 7.30 மணிக்கு நிறைவு பெற்றது. இதில் ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்