நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் அடையாள அட்டை வழங்க கோரிக்கை

நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2019-02-12 22:00 GMT
நெல்லை, 

நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர், உரிமைகளுக்கான சங்கத்தினர் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.

மாவட்ட தலைவர் செல்வசுந்தரி தலைமை தாங்கினார். மாநிலதுணைதலைவர் பாரதி அண்ணா ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசினார். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலுயுறுத்தி கோஷங்கள் போட்டனர்.

அடையாள அட்டை

மாற்றுத்திறனாளி சரண்யாவுக்கு, மீண்டும் வேலை வழங்கவேண்டும். சரண்யா கொடுத்த பாலியல் தொல்லை புகாருக்கு நியாயமான விசாரணை நடத்தவேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மாதகாலமாக அடையாள அட்டை வழங்கப்படவில்லை. அந்த அட்டைகளை உடனே வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தில் மாநில செயலாளர்கள் வில்சன், முத்துகாந்தாரி, மாவட்டதுணைதலைவர் தியாகராஜன், துணை செயலாளர்கள் அகஸ்தியராஜன், ஜெயந்தி, அமராவதி, இசக்கிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்