அனுமதியின்றி மணல் அள்ளிய பொக்லின் எந்திரம்,லாரி பறிமுதல்- 2 டிரைவர்கள் கைது

வலங்கைமான் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய பொக்லின் எந்திரம்-லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 டிரைவர்களை கைது செய்தனர்.

Update: 2019-02-15 22:30 GMT
வலங்கைமான், 

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள தொழுவூர் பகுதி சிவன் கோவில் திடல் அருகே சுள்ளானாற்றில் அனுமதியின்றி பொக்லின் எந்திரம் மூலம் லாரியில் மணல் அள்ளப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து. அதன்பேரில் வலங்கைமான் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு பொக்லின் எந்திரம் மூலம் லாரியில் மணல் ஏற்றி கொண்டிருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர்கள் தஞ்சை அருகே உள்ள குருங்குளம் பகுதியை சேர்ந்த தங்கராசு மகன் பாலகிருஷ்ணன் (வயது 25), நீடாமங்கலம் அருகே உள்ள களனூர் பகுதியை சேர்ந்த சதாசிவம் மகன் நாகலிங்கம் (35) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் மணல் அள்ள பயன்படுத்திய பொக்லின் எந்திரம், லாரி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்