தர்ணாவுக்கு ஆதரவு தெரிவிக்க மு.க.ஸ்டாலின் இன்று புதுச்சேரி வருகிறார்

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முதல்–அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று புதுச்சேரி வருகிறார்.

Update: 2019-02-16 23:01 GMT

புதுச்சேரி,

புதுவை கவர்னர் கிரண்பெடியின் நடவடிக்கைகளை கண்டித்து முதல்–அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் கவர்னர் மாளிகை முன்பு கடந்த 13–ந்தேதி தர்ணா போராட்டத்தை தொடங்கினார்கள். அவர்களது தர்ணா போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

24 மணிநேரமும் தர்ணாவில் ஈடுபட்டுள்ள முதல்–அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கவர்னர் மாளிகை முன்பு ரோட்டிலேயே படுத்து உறங்கி வருகிறார்கள். அவர்களது போராட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், கனிமொழி எம்.பி., காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் முகுல்வாஸ்னிக், சஞ்சய்தத் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் 12 மணிக்கு சென்னையிலிருந்து புதுச்சேரி வருகிறார். அவர் கவர்னர் மாளிகை முன்பு சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முதல்–அமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு தனது ஆதரவினை தெரிவிக்கிறார். அதன்பின் மீண்டும் அவர் சென்னைக்கு திரும்பி செல்கிறார்.

மேலும் செய்திகள்