நாடாளுமன்ற தேர்தலில் சரத்பவார் போட்டி மாதா தொகுதியில் களம் இறங்குகிறார்

நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடுவதாக சரத்பவார் அறிவித்து உள்ளார்.

Update: 2019-02-20 22:07 GMT
புனே, 

மராட்டியத்தில் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் வலுவான கூட்டணி அமைவதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தீவிர முயற்சி செய்து வருகிறார். 78 வயதான அவர் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டால் தொண்டர்கள் உற்சாகத்துடன் பணியாற்றுவார்கள் என கருதப்படுகிறது.

எனவே அவர் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என தேசியவாத காங்கிரசார் வலியுறுத்தி வந்தனர். எனவே சரத்பவார் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவாரா? மாட்டாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடுவதாக சரத்பவார் அறிவித்து உள்ளார். லோனிகல்போர் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது சரத்பவார் இதை தெரிவித்தார். தான் மாதா தொகுதியிலும், தனது மகள் சுப்ரியா சுலே பாராமதி தொகுதியிலும் போட்டியிடுவதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்