தடுப்புச்சுவரில் மோதி கார் கவிழ்ந்தது: தலைமை ஆசிரியர் மகன் பலி

தடுப்புச்சுவரில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் தலைமைஆசிரியர் மகன் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-02-21 23:00 GMT
வெள்ளியணை,

கரூர் காந்திகிராமம் ஜி.ஆர்.வி. நகரை சேர்ந்தவர் ரெத்தினம். இவர் மாயனூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் அருள் (வயது 20). இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை அருள் வீட்டிலுள்ள காரை எடுத்து கொண்டு, தனது தாத்தா,பாட்டியை அழைத்து சென்று மகாதானபுரத்தில் அவர்களின் வீட்டில் விட்டுவிட்டு, அதே காரில் காந்திகிராமத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது புலியூர் அருகே உள்ள குளத்துப்பாளையம் பகுதியில் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அருள் ஓட்டிச்சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் காரின் இடிபாடுகளில் சிக்கி அருள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவலறிந்த மாயனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அருளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்