சொத்துவரி உயர்வை கண்டித்து சிவகங்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

சிவகங்கையில் சொத்துவரி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2019-02-23 00:00 GMT

சிவகங்கை,

சிவகங்கை நகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அங்குள்ள அரண்மனை வாசல் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கபூபதி தலைமை தாங்கினார்.

இதில்சிவகங்கை நகராட்சி பகுதியில் சொத்துவரி, வீட்டுவரி உயர்த்தியதை திரும்ப பெற வேண்டும். கடைகள், அலுவலகங்களுக்கு 100 சதவீதம் உயர்த்திய வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியும், ஆர்ப்பாட்டத்தை விளக்கியும் பேசப்பட்டது.

மேலும் வரி உயர்வை கண்டித்து அரசுக்கு எதிராக கோ‌ஷமிடப்பட்டது. மாநிலக்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ், மாவட்ட அமைப்பாளர் சின்னத்துரை, மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர்கள் தண்டியப்பன், கந்தசாமி, மணியம்மா, உமாநாத் பேசினர்.

இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மதி, உலகநாதன், வடிவேலு, போஸ், வெங்கையா, முருகேசன், சண்முகப்பிரியா, சுரேஷ் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்