நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு கூட்டணி அரசு கவிழ்ந்துவிடும் - எடியூரப்பா சொல்கிறார்

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு கூட்டணி அரசு கவிழ்ந்துவிடும் என்று எடியூரப்பா கூறினார்.

Update: 2019-02-25 23:15 GMT
பெங்களூரு,

பா.ஜனதா சார்பில் பிரதமர் மோடி விஜயசங்கல்ப என்ற பெயரில் பொதுக்கூட்டம் ஹாவேரியில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா கலந்து கொண்டு பேசியதாவது:-

கர்நாடகத்தில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் பரஸ்பரம் சண்டை போட்டுக்கொள்வதில் காலத்தை கழித்து வருகிறார்கள். கூட்டணி ஆட்சியில் வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை.

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அந்த கூட்டணி உடைந்துவிடும். அவர்கள் ஒற்றுமையாக இருக்க வாய்ப்பு இல்லை. அதனால் அந்த தேர்தலுக்கு பிறகு கூட்டணி அரசு கவிழ்ந்துவிடும்.

நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க பா.ஜனதா முழுவீச்சில் தயாராகி வருகிறது. ஹாவேரிக்கு ராகுல் காந்தி வரட்டும், சோனியா காந்தி வரட்டும், அதுபற்றி எங்களுக்கு கவலை இல்லை.

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு கர்நாடகத்தில் அரசியல் மாற்றங்கள் நிகழும். அதை நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள். காங்கிரசில் தலித் மக்களுக்கு அநீதி ஏற்பட்டு வருகிறது. இதை துணை முதல்-மந்திரி பரமேஸ்வரே கூறி இருக்கிறார். அவரது கருத்தை நான் வரவேற்கிறேன். இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

மேலும் செய்திகள்