தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-01 22:55 GMT
தஞ்சாவூர்,

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி தஞ்சை மாவட்டத்தில் பணியாற்றி வந்த 11 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இவர்கள் 3 மாதம் பணிக்காக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். வேறு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்தும், இந்த மாற்றத்தை ரத்து செய்துவிட்டு வழக்கம்போல் தஞ்சை மாவட்டத்திற்குள் இடமாற்றம் செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு வருவாய்த்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நேற்று நடந்தது.

இதற்கு சங்க தலைவர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். செயலாளர் இளஙகோவன் முன்னிலை வகித்தார்.

இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரெங்கசாமி கலந்து கொண்டு பேசினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இவர்கள் நேற்று பணிக்கு செல்லவில்லை. எங்களது கோரிக்கைகளை ஏற்று மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் செய்யப்பட்டதை ரத்து செய்யவில்லை என்றால் வருகிற 4-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்