475 போலீசார் திடீர் இடமாற்றம் போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் 475 போலீசார் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா பிறப்பித்து உள்ளார்.

Update: 2019-03-04 23:15 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட காவல் துறையில் 3 ஆண்டுகள் ஓரிடத்தில் பணிபுரிந்து இருந்தால் அவர்களுக்கு பொது இடமாறுதலுக்கான உத்தரவு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் மே மாதத்திற்குள் பிறப்பிக்கப்படுவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டும் ஓரிடத்தில் 3 ஆண்டுகள் பணி முடித்த 2-ம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வரை உள்ளவர்களுக்கு திடீரென இடமாறுதலுக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதில் அனைவரிடமும், அவர்கள் விரும்பும் 3 போலீஸ் நிலையங்கள் கேட்டு பெறப்பட்டு, போலீஸ் நிலையங்களில் உள்ள காலியிடங்களை கணக்கிட்டு, அதனடிப்படையில் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அவர்கள் விரும்பிய இடங்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் பணிபுரிந்த 115 பேர், தூத்துக்குடி ஊரகத்தில் 39 பேர், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 59 பேர், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 63 பேர், மணியாச்சி உட்கோட்டத்தில் 22 பேர், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 74 பேர், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 58 பேர், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 26 பேர், சிறப்பு பிரிவுகளில் 17 பேர் மற்றும் காத்திருப்பில் இருந்த 2 பேர் ஆக மொத்தம் 475 காவல் போலீசாருக்கு இடமாறுதல் வழங்கப்பட்டு உள்ளது.

இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா பிறப்பித்து உள்ளார். 

மேலும் செய்திகள்