நீடாமங்கலத்தில் இருந்து தர்மபுரிக்கு அரவைக்காக 945 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது

நீடாமங்கலத்தில் இருந்து தர்மபுரிக்கு அரவைக்காக 945 டன் நெல், சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2019-03-06 22:30 GMT
நீடாமங்கலம்,

திருவாரூர் மாவட்டத்தில் சம்பா அறுவடை பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளன. ஆதலால் மாவட்டம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நெல் மூட்டைகள் பொதுவினியோக திட்டத்தில் அரிசியாக வழங்குவதற்காக அரவைக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களுக்கும் அரவைக்கு நெல் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதன்படி நேற்று நீடாமங்கலம் மற்றும் மன்னார்குடி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் திறந்தவெளி சேமிப்பு கிடங்கு இடையர்நத்தம் பகுதியில் இருந்து 75 லாரிகளில், 945 டன் சன்னரக நெல் மூட்டைகள் நீடாமங்கலம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

பின்னர் சரக்கு ரெயிலின் 21 பெட்டிகளில் நெல் மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஏற்றினர். இதைதொடர்ந்து அரவைக்காக நீடாமங்கலத்தில் இருந்து 945 டன் நெல் மூட்டைகளுடன் சரக்கு ரெயில், தர்மபுரிக்கு புறப்பட்டு சென்றது.

மேலும் செய்திகள்