இளம்பெண்ணை கற்பழித்து கொன்றவருக்கு தூக்கு தண்டனை கல்யாண் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

இளம்பெண்ணை கற்பழித்து கொன்றவருக்கு தூக்கு தண்டனை விதித்து கல்யாண் செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2019-03-06 23:00 GMT
அம்பர்நாத்,

இளம்பெண்ணை கற்பழித்து கொன்றவருக்கு தூக்கு தண்டனை விதித்து கல்யாண் செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

இளம்பெண் கற்பழித்து கொலை

தானே மாவட்டம் அசன்காவ் அருகில் உள்ள சவ்ரோலி கிராமத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 5-ந் தேதி அங்குள்ள தண்டவாளம் அருகே கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

போலீஸ் விசாரணையில் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இளம்பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செல்போன் மூலம் சிக்கிய கொலையாளி

இந்த சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் இளம்பெண்ணை கற்பழித்து கொன்றவர்அவரின் செல்போனையும் திருடி சென்றிருந்தது தெரியவந்தது. அலைவரிசை மூலம் அந்த செல்போன் இருக்கும் இடத்தை போலீசார் ஆராய்ந்தனர்.

அப்போது, சகாப்பூரில் உள்ள ஒரு கடையில் செல்போனை விற்க முயன்ற போது, கொலையாளியை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர் சகாப்பூரை சேர்ந்த அேசாக் முகானே (வயது37) என்பது தெரியவந்தது.

குடித்துவிட்டு வேலையில்லாமல் இருந்து வந்த அவர், சம்பவத்தன்று தண்டவாளம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இளம்பெண் ஒருவர் தனியாக வருவதை கவனித்த அவர், அப்பெண்ணை புதருக்குள் இழுத்து சென்று கற்பழித்து கொன்றது தெரியவந்தது.

தூக்கு தண்டனை

போலீசார் அவர் மீது கல்யாண் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை கூடுதல் செசன்ஸ் நீதிபதி என்.எம்.வாக்மரே முன்னிலையில் நடந்தது. வழக்கு விசாரணை நிறைவில் அசோக் முகானே மீதான கற்பழிப்பு மற்றும் கொலை குற்றச்சாட்டு தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அப்போது, குற்றவாளி அேசாக் முகானேவுக்கு நீதிபதி மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு கூறினார். மேலும் அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

கல்யாண் செசன்ஸ் கோர்ட்டு, குற்றவாளி ஒருவருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறியிருப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்