லாரி-கார் மோதல் - தொழிலாளி பலி

தூத்துக்குடி லாரி மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலினார்.

Update: 2019-03-07 23:03 GMT
எட்டயபுரம், 

தூத்துக்குடி பெரிய துறைமுகம் பகுதியைச் சேர்ந்தவர் இருளாண்டி (வயது 50). கூலி தொழிலாளி. இவர் நேற்று காலையில் தன்னுடைய குடும்பத்தினருடன் காரில் மதுரையில் உள்ள கோவிலுக்கு சென்றார். பின்னர் மாலையில் அவர்கள் அங்கிருந்து காரில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். இருளாண்டி மகன் நவநீதகிருஷ்ணன் (26) காரை ஓட்டினார். எட்டயபுரம் அருகே அழகாபுரி நாற்கர சாலையில் வந்தபோது, தேங்காய் லோடு ஏற்றிய லாரி மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் பின்புறம் கார் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் காரில் இருந்த இருளாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காரில் இருந்த நவநீதகிருஷ்ணன் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருப்புகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்தில் இறந்த இருளாண்டியின் உடலை மாசார்பட்டி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரான திருச்சி மாவட்டம் முசிறி அருகே உத்தண்டம்பட்டியைச் சேர்ந்த செல்வராஜிடம் (40) விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்