குடிநீர் வழங்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு காலிகுடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்

குடிநீர் வழங்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு காலிகுடங்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-08 23:00 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் பூண்டியை அடுத்த நம்பாக்கம் கிராமத்தில் 200–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் ஊராட்சி சார்பாக தெரு குழாய்கள் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 2 மாதங்களாக அந்த பகுதி மக்களுக்கு சரிவர குடிநீர் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து பூண்டி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக காலிகுடங்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தங்களது ரே‌ஷன் கார்டு, வாக்காளர் அட்டை, ஆதார் கார்டு போன்றவற்றை ஒப்படைத்துவிட்டு ஆந்திராவுக்கு சென்று விடுவதாக எச்சரிக்கை விடுத்தனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்