நாடாளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படை குழுக்களின் செயல்பாடு குறித்து ஆலோசனை

உரிய ஆவணங்களின்றி பணம் எடுத்து செல்வோரை பிடித்து விசாரிப்பது மற்றும் பறிமுதல் செய்த பணத்தை கருவூலத்தில் ஒப்படைப்பது உள்ளிட்ட பணிகள் குறித்து கலெக்டர் விரிவாக எடுத்துரைத்தார்.

Update: 2019-03-11 22:30 GMT
கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2019-ஐ முன்னிட்டு, மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அன்பழகன் தலைமையில், பறக்கும்படை, நிலையாக நின்று ஆய்வு செய்யும் குழு, தேர்தல் பிரச்சாரங்களை வீடியோ எடுக்கும் குழுக்களுக்கான ஆலேசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தின் போது, ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்களின்றி பணம் எடுத்து செல்வோரை பிடித்து விசாரிப்பது மற்றும் பறிமுதல் செய்த பணத்தை கருவூலத்தில் ஒப்படைப்பது உள்ளிட்ட பணிகள் குறித்து கலெக்டர் விரிவாக எடுத்துரைத்தார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரிகள் சூர்யபிரகாஷ், சிவப்பிரியா (நிலம் எடுப்பு), மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) செல்வசுரபி, கரூர் சட்டமன்ற தொகுதி தோதல் நடத்தும் அதிகாரியும் கரூர் வருவாய் கோட்டாட்சியருமான சரவணமூர்த்தி, அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தோதல் நடத்தும் அதிகாரியும், கலால் துறை உதவி ஆணையருமான மீனாட்சி, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி தோதல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட வழங்கல் அதிகாரியுமான மல்லிகா, விராலிமலை சட்டமன்ற தொகுதி தோதல் நடத்தும் அதிகாரியும், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியருமான சிவதாஸ், மணப்பாறை சட்டமன்ற தொகுதி தோதல் நடத்தும் அதிகாரியும், திருச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரியுமான நடராஜன், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியும் திண்டுக்கல் மாவட்ட வழங்கல் அதிகாரியுமான ஜான்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்