தேர்தல் நடத்தை விதி அமல்: அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள்-விளம்பர பேனர்கள் அகற்றம்

தேர்தல் நடத்தை விதி அமல்படுத்தப்பட்டு இருப்பதால் காரைக் காலில் அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள், விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டன.

Update: 2019-03-12 22:45 GMT
காரைக்கால்,

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதி அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான விக்ராந்த்ராஜா தேர்தல் நடத்தை விதிகளின் படி அரசியல் கட்சியினர் ஒட்டி உள்ள சுவரொட்டிகள் மற்றும் ஆங்காங்கே கட்சிகள் வைத்துள்ள விளம்பர பேனர்களை அகற்றும்படி உத்தரவிட்டார்.

அதன்பேரில் காரைக்கால் நகராட்சி ஆணையர் சுபாஷ் மற்றும் அதிகாரிகள் சுவரொட்டிகள், விளம்பர பேனர்களை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் நகராட்சி பணியாளர்கள் காரைக்காலில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் மற்றும் விளம்பர பேனர்களை அகற்றினர்.

தேர்தல் நடத்தை விதியை மீறி விளம்பர பேனர் வைக்கும் அரசியல் கட்சியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மேலும் செய்திகள்