தூத்துக்குடியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

தூத்துக்குடியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-15 21:30 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடக்கிறது. இதனால் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. அதே போன்று வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று காலையில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தூத்துக்குடி 3-ம் மைல் பகுதி, அசோக் நகர், மாப்பிள்ளையூரணி, ரோச் பூங்கா ஆகிய பகுதிகளில் மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிள்ளைமுத்து மற்றும் போலீசார் அடங்கிய பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகனங்களில் முறையாக ஆவணங்களுடன் பணம் கொண்டு செல்லப்படுகிறதா? பரிசு பொருட்கள் ஏதும் உள்ளதா என்பது குறித்து சோதனை செய்யப்பட்டது. ஆனால் பொருட்களோ, பணமோ சிக்கவில்லை. 

மேலும் செய்திகள்