ஏ.டி.எம். மையங்களில் ரூ.86¾ லட்சம் மோசடி 4 பேர் மீது வழக்கு

ஏ.டி.எம். மையங்களில் ரூ.86¾ லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2019-03-16 21:45 GMT
விருதுநகர்,

மதுரையை சேர்ந்த தனியார் நிறுவனம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வங்கி ஏ.டி.எம். மையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணம் நிரப்பும் பணியை மேற்கொண்டுள்ளது.

இந்த நிறுவனத்தில் ராஜபாளையத்தை சேர்ந்த வெங்கேடஷ்(வயது 31), வைரமுத்து(40), பழனிசாமி (33), ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கோபிநாத்(35) ஆகிய 4 பேரும் ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரம்பும் பணிக்காக நியமிக்கப்பட்டு இருந்தனர்.

கடந்த டிசம்பர் மாதம் மாவட்டம் முழுவதும் உள்ள 22 ஏ.டி.எம். மையங்களில் ஆய்வு மேற்கொண்டபோது ரூ.86 லட்சத்து 76 ஆயிரத்து 500 குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி தனியார் நிறுவனம் விசாரணை நடத்தியதில், ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பும் பணியை செய்து வந்த வெங்கேடஷ் உள்பட 4 பேரும் பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து நிறுவன மேலாளர் சந்திரசேகரன் அளித்த புகாரின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இந்த 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்