தஞ்சையில் வாக்காளர் விழிப்புணர்வு பிரசார வாகனம் கலெக்டர் தொடங்கி வைத்தார்

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.

Update: 2019-03-17 22:45 GMT
தஞ்சாவூர்,

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறும்போது, 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களிடம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி 100 சதவீதம் வாக்குப்பதிவை எட்டும் வகையில் செய்தி-மக்கள் தொடர்புத்துறை சார்பில் வாகனம் மூலம் பிரசாரம் செய்யப்படுகிறது. திரைப்பட கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் நடித்த குறும்படங்கள் இந்த வாகனம் மூலம் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், கல்லூரி வளாகங்களில் திரையிடப்படும். வாக்காளர்கள் அனைவரும் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், மாவட்ட செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் சுருளிபிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்