வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் செடில் திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் செடில் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Update: 2019-03-17 22:30 GMT

வலங்கைமான்,

வலங்கைமான் வேம்படி செட்டித்தெருவில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் செடில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு செடில் திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக கடந்த 3–ந்தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. இதை தொடர்ந்து 10–ந்தேதி முதல் காப்பு காட்டும் நிகழ்ச்சியும், நேற்று 2–ம் காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

செடில் விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதையடுத்து பக்தர்கள் பால்குடம், அலகு காவடி எடுத்து கொண்டு ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலுக்கு வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

சிறப்பு அலங்காரம்

இதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடந்தது. இதில் கடம்புறப்பாடு செய்து எல்லையம்மன் கோவில் தெருவில் இருந்து ஆடு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோவில் எதிரே அமைக்கப்பட்ட செடில் மரத்தில் ஆடு ஏற்றபட்டு மூன்று முறை வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்