கோட்டைப்பட்டினம் அருகே வாகன சோதனையில் ரூ.1½ லட்சம் பறிமுதல்

கோட்டைப்பட்டினம் அருகே வாகன சோதனையில் ரூ.1½ லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-03-22 22:30 GMT
கோட்டைப்பட்டினம்,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்க பறக்கும் படையினர் உள்ளிட்டோர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி நேற்று கோட்டைப்பட்டினம் அருகே உள்ள பாலக்குடி கிராமத்தில் தேர்தல் அதிகாரி ஆதிசாமி தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், வேன் டிரைவரிடம் ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்து 200 இருந்தது. ஆனால் அதற்குரிய ஆவணங்கள் டிரைவரிடம் இல்லை. இதையடுத்து அவரிடம் இருந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், டிரைவர் காரைக்கால் பகுதியை சேர்ந்த ஆசைத்தம்பி என்பதும், காரைக்கால் பகுதியில் இருந்து மார்த்தாண்டத்திற்கு மீன் ஏற்றி சென்று இறக்கிவிட்டு, திரும்பி காரைக்காலுக்கு சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பறக்கும் படையினர் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சுப்பையா விடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்