சேலத்தில் பிரபல ரவுடி, குண்டர் சட்டத்தில் கைது

சேலம் தாதகாப்பட்டி சண்முகாநகர் பகுதியை சேர்ந்தவர் விஜி (வயது 33). பிரபல ரவுடியான இவர் மீது வழிப்பறி, கொலை மிரட்டல், செயின் பறிப்பு உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Update: 2019-03-23 22:30 GMT
சேலம்,

சேலம் தாதகாப்பட்டி சண்முகாநகர் பகுதியை சேர்ந்தவர் விஜி (வயது 33). பிரபல ரவுடியான இவர் மீது வழிப்பறி, கொலை மிரட்டல், செயின் பறிப்பு உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில், கடந்த மாதம் 16-ந் தேதி அல்லிக்குட்டை காலனி அருகே நடந்து சென்ற ஒரு பெண்ணிடம் விஜி மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி 3 பவுன் நகையை பறித்து சென்றனர்.

இது தொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடி விஜியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அஸ்தம்பட்டி, அன்னதானப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ரவுடி விஜி ஈடுபட்டதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அன்னதானப்பட்டி போலீசார், மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். அதன்படி நேற்று ரவுடி விஜியை குண்டர் சட்டத்தில் கைது செய்து கமிஷனர் சங்கர் உத்தரவிட்டார்.இதையடுத்து மத்திய சிறையில் உள்ள அவரிடம் அதற்கான நகலை போலீசார் வழங்கினர்.

மேலும் செய்திகள்