ஓட்டு போட்டு ஜனநாயக உரிமையை நிலை நாட்ட வேண்டும் கலெக்டர் நடராஜன் பேச்சு

தேர்தலில் ஓட்டு போட்டு ஜனநாயக உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்று கலெக்டர் நடராஜன் கூறினார்.

Update: 2019-03-24 23:00 GMT

மதுரை,

நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி கல்லூரி மாணவ–மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கம் நேற்று நடந்தது. மாநகராட்சி கமி‌ஷனர் விசாகன் தலைமை தாங்கினார். பேரணியை கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் தங்களது உரிமையான வாக்குப்பதிவினை 100 சதவீதம் செலுத்தி ஜனநாயக உரிமையை நிலைநாட்டிட வேண்டும். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தான் கல்லூரி மாணவ–மாணவிகளை கொண்டு இந்த பேரணி நடத்தப்படுகிறது. அத்துடன் கையெழுத்து இயக்கமும் நடக்கிறது.

மாணவர்கள் தாங்கள் ஓட்டு போடுவது மட்டுமின்றி தங்களது பெறோர்கள், நண்பர்கள், உறவினர்கள் என அனைவரையும் ஓட்டுபோடுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த விழிப்புணர்வு பணியால் மதுரை மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை அடைவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேரணி ரேஸ்கோர்ஸ் எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் தொடங்கி, அவுட்போஸ்ட், சுற்றுச்சூழல் பூங்கா, தல்லாகுளம், தமுக்கம், ராஜாஜி பூங்கா வழியாக காந்தி மியூசியத்தில் நிறைவடைந்தது.

மேலும் செய்திகள்