உரிய ஆவணம் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.55 ஆயிரம் பறிமுதல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை

திருச்சியில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில், உரிய ஆவணம் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.55 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-03-24 22:45 GMT
திருச்சி,

தமிழகத்தில் ஏப்ரல் 18-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காகவும், தேர்தல் வெளிப்படை தன்மையுடன் நடப்பதை உறுதி செய்வதற்காகவும் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவு படி அதிகாரிகள் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்த வாகன சோதனையில் இதுவரை பல கோடி ரூபாய் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

ரூ.55 ஆயிரம் பறிமுதல்

திருச்சி கரூர் பைபாஸ் சாலை அண்ணாமலை நகர் பகுதியில் நேற்று காலை பறக்கும் படை தாசில்தார் வசந்தா தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை போட்டனர். காரில் இருந்த தில்லைநகரை சேர்ந்த மகேஷ்வரன் என்பவர் ரூ.55 ஆயிரத்து 380 வைத்திருந்தார். அந்த பணத்திற்குரிய ஆவணம் எதையும் அவர் சமர்ப்பிக்காததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் இந்த பணம் திருச்சி மேற்கு தாசில்தார் ராஜவேலுவிடம் ஒப்படைக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்