திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோடும் 4 வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோடும் 4 வீதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

Update: 2019-03-28 23:00 GMT
திருவாரூர்,

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் நிறைவாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதி ஆழித்தேரோட்டம் நடக்கிறது. அதனுடன் விநாயகர், சுப்பிரமணியர், அம்மன் மற்றும் சண்டிகேசுவரர் தேரோட்டம் நடைபெற உள்ளது.

விழாவையொட்டி கோவில் தேவாசிரியர் மண்டபத்தில் இருந்து தியாகராஜர் புறப்பட்டு ஆழித்தேரில் எழுந்தருளினார். அதனுடன் விநா யகர், சுப்பிரமணியர், கமலம்பாள், சண்டிகேஸ்வரர் சாமிகளும் அந்தந்த தேரில் எழுந்தருளினர்.

இந்த நிலையில் திருவாரூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆழித்தேரோடும் 4 வீதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மேலும் துப்புரவு பணியாளர்களை கொண்டு நகரை தூய்மையாக பாராமரிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்