வாக்குகளை உறுதி செய்யும் எந்திரம் சட்டசபை தொகுதி வாரியாக அனுப்பப்பட்டது

மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்குகளை உறுதி செய்யும் எந்திரம் தொகுதிவாரியாக பிரித்து அனுப்பப்பட்டது.

Update: 2019-04-01 22:15 GMT

சிவகங்கை,

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்த முறை புதியதாக வாக்காளர்கள் வாக்கு போட்டவுடன் தாங்கள் வாக்களித்த சின்னத்தை பார்த்து உறுதி செய்து கொள்ள வாக்குப்பதிவு உறுதி செய்யும் எந்திரம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் இணைக்கப்படவுள்ளது. காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை மற்றும் மானாமதுரை அகிய 4 சட்டசபை தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு உறுதி எந்திரம் சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

இந்த எந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் 4 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் மானாமதுரை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கும் விகிதாசார அடிப்படையில் ஒதுக்கீடு செய்து அனுப்பும் பணி மாவட்ட வருவாய் அலுவலர் லதா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிவகங்கை கோட்டாட்சியர் செல்வகுமாரி, தாசில்தார் கண்ணன் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் லதா கூறியதாவது:– சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு 452 எந்திரம், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு 438 எந்திரம், சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்கு 456 எந்திரம், மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு 421 எந்திரம் மற்றும் மானாமதுரை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு 437 எந்திரம் என பதிவான வாக்குகளை உறுதி செய்யும் எந்திரத்தை விகிதாசார அடிப்படையில் பிரித்து அனுப்பப்படுகிறது, இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்