100 சதவீதம் நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி ஸ்கேட்டிங் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

100 சதவீதம் நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி ஸ்கேட்டிங் மூலம் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொண்டனர். தஞ்சையில் 4 கி.மீ. தூரம் இந்த நிகழ்ச்சி நடந்தது.

Update: 2019-04-07 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை நாடாளுமன்ற, சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தற்போது வேட்பாளர்கள் அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி நேற்று தஞ்சை மாநகராட்சி சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளை கொண்டு ரோலர் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. தஞ்சை புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் இருந்து ரோலர் ஸ்கேட்டிங் விழிப்புணர்வை தஞ்சை மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன் தொடங்கி வைத்தார்.

ஸ்கேட்டிங் சென்ற மாணவ, மாணவிகள் 100 சதவீதம் உண்மையாகவும், நேர்மையாகவும் வாக்களிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர்.

சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் சென்று தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் நிறைவு பெற்றது. இதில் மாநகராட்சி மேலாளர் கிளமெண்ட் அந்தோணிராஜ், உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், ரெட்கிராஸ் பொருளாளர் முத்துக்குமார், பயிற்சியாளர் ராஜூ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்