நாகையில் இருந்து திருச்சிக்கு அரவைக்காக 1,000 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது

நாகையில் இருந்து திருச்சிக்கு 1,000 டன் நெல் அரவைக்காக சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2019-04-08 22:30 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் சம்பா அறுவடை முடிவடைந்துள்ளது. விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் திறந்தவெளி நெல் சேமிப்பு மையத்தில் சேமிக்கப்படுகிறது. இந்த நெல் மூட்டைகள் அரவைக்காக மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் வெளி மாவட்டங்களில் உள்ள ஆலைகளுக்கும் சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதன்படி நாகையில் இருந்து திருச்சிக்கு 1,000 டன் சன்னரக நெல் அரவைக்காக சரக்கு ரெயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இதை முன்னிட்டு நாகை பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் சேமிக்கப்பட்ட நெல் மூட்டைகள் லாரிகளின் மூலம் நாகை ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சுமை தூக்கும் தொழிலாளர்கள் லாரிகளில் இருந்து நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர். இதை தொடர்ந்து சரக்கு ரெயில் நெல் மூட்டைகளுடன் திருச்சிக்கு புறப்பட்டு சென்றது. 

மேலும் செய்திகள்