தேர்தல் பிரசாரத்துக்காக எடப்பாடி பழனிசாமி இன்று கரூர் வருகை பலத்த போலீஸ் பாதுகாப்பு

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்துக்காக கரூருக்கு இன்று (சனிக்கிழமை) வருகை தருகிறார். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-04-12 22:30 GMT
கரூர், 

கரூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரைக்கு ஆதரவாக பொதுமக்களி டையே பேசி வாக்கு சேகரிக்க தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (சனிக்கிழமை) மாலை கரூருக்கு வருகை தருகிறார்.

மதுரையில் இருந்து புறப்பட்டு பிரசார வேனில் வரும் அவருக்கு, கரூர் மாவட்ட எல்லையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படு கிறது.

பின்னர் அரவக்குறிச்சி கடைவீதி, கரூர் பஸ் நிலையம் மனோகரா கார்னர் ரவுண்டானா ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் நின்று கொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கரூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரைக்கு ஆதரவு கேட்டு, பிரசாரம் செய்கிறார். அதனை தொடர்ந்து பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் என்.ஆர்.சிவபதியை ஆதரித்து பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள கிருஷ்ணராயபுரம் சித்தலவாய் பஸ் நிலையம், குளித்தலை பஸ் நிலையம் முன்பு திறந்த வேனில் நின்றவாறு பிரசாரம் செய்கிறார்.

அரவக்குறிச்சியில் இன்று மாலை 6.30 மணியளவில் தொடங்கப்பட இருக்கிற முதல்-அமைச்சர் பிரசாரம் இரவு 9.30 மணியளவில் குளித்தலையில் நிறைவு பெறுகிறது. முதல்-அமைச்சர் வருகை தர இருப்பதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

மேலும் செய்திகள்