மத்திய அரசு துறைகளில் 965 மருத்துவ அதிகாரி பணியிடங்கள்

மத்திய அரசு துறைகளில் மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 965 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

Update: 2019-04-15 11:41 GMT
மத்திய அரசுப் பணியாளர் தேர் வாணையம் சுருக்கமாக யூ.பி.எஸ்.சி. என அழைக்கப்படுகிறது. மத்திய அரசு துறைகளின் பல்வேறு உயர் பொறுப்புகளை இந்த அமைப்பு தேர்வு நடத்தி நியமனம் செய்து வருகிறது. தற்போது மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஒருங்கிணைந்த மருத்துவ சேவைப் பணிகள் தேர்வு 2019 எனப்படும் இந்த தேர்வு மூலம் உதவி டிவிஷன் மருத்துவ அதிகாரி, துணை பொது மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 965 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பிரிவு வாரியான பணியிட விவரம் : உதவி டிவிஷனல் மருத்துவ அதிகாரி -300 பேர், உதவி மருத்துவ அதிகாரி - 46 பேர், ஜூனியர் சென்டிரல் கெல்த் சர்வீஸஸ் -25, துணை பொது மருத்துவ அதிகாரி (கிரேடு2) -362 பேர், டெல்லி நகர கவுன்சில் மருத்துவ அதிகாரி -7 பேர்

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு..

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள், 1-8-2019-ந் தேதியில் 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-8-1987-க்கு பிறகு பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி

எம்.பி.பி.எஸ். படித்தவர்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், நேர்காணல் மற்றும் ஆளுமைத் திறன் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

கட்டணம்

விண்ணப்பதாரர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திற னாளிகள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இணையதளம் மற்றும் வங்கி வழியாக கட்டணம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மே 6-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இதற்கான தேர்வு 21-7-2019-ந்தேதி நடைபெறுகிறது. தேர்வு முடிவு செப்டம்பர்-அக்டோபரில் வெளியாகும். அதன் பிறகு நேர்காணல் தேதி அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.upsc.gov.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.

மேலும் செய்திகள்