டுவிட்டரில் அதிக கணக்குகளை பின்தொடர தடை

டுவிட்டர் தனது பயனாளர் தினசரி பின்தொடரும் கணக்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி உள்ளது.

Update: 2019-04-15 12:02 GMT
வதந்திகள், போலி தகவல்கள் போன்ற தேவையற்ற சங்கதிகளை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன்படி ஒரு பயனாளர் தனது கணக்கில் இதுவரை 1000 பின்தொடர்பவர்களின் கணக்குகளை சேர்த்துக் கொள்ளலாம் என்ற கட்டுப்பாடு இனி 400 கணக்குகளாக குறைக்கப்படுகிறது.

சில நேரங்களில் ரோபோக்கள் போல தானியங்கி முறையில் செயல்படும் டுவிட்டர் கணக்குகளை அதிக எண்ணிக்கையிலான மக்கள் பின்தொடர்கிறார்கள். அது யாரை பின்தொடர முயல்கிறது என்பது மறுபரிசீலனை செய்யப்படுகிறது. அதிகப்படியான பின்தொடர்பவர்களைக் கொண்ட தானியங்கி கணக்குகளில் இணைய தொடர்புகள் மற்றும் சந்தைப்படுத்தல் விளம்பரங்கள் மற்றும் தகவல்கள் இருக்கிறதா? என்பதை பரிசீலித்து அவை நிறுத்திவைக்கப்பட உள்ளன. தேவையற்ற நோக்கில் டுவிட்டர் கணக்குகளை பயன்படுத்து வதும், குறுகிய காலத்தில் அதிகப்படியானவர்களை பின்தொடர்பவர்கள் மற்றும் அதிககணக்குகளை பின்தொடர முயற்சிக்கும் கணக்குகளை அடையாளம் காணவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக டுவிட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்