மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம்

தர்மபுரி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன.

Update: 2019-04-17 22:15 GMT

தர்மபுரி,

தர்மபுரி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிபடுத்துவதற்காக அனைவரும் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் 21 களப்பகுதி அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் அழைப்பிதழ்கள், துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மகளிர் திட்டஇயக்குனர் ஆர்த்தி தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இதேபோல் தர்மபுரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகள், சந்தைகளில் பொதுமக்கள் வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். இதேபோல் பஸ்கள், ஆட்டோக்களில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கூடும் இடங்களில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

மேலும் செய்திகள்