தேர்தல் விதிமுறைகளை மீறி கூட்டம் நடத்தியதாக முன்னாள் அமைச்சர் உள்பட 3 பேர் மீது வழக்கு

திருத்துறைப்பூண்டி அருகே தேர்தல் விதிமுறைகளை மீறி கூட்டம் நடத்தியதாக அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

Update: 2019-04-18 22:15 GMT
திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டி அருகே மேட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் பகுதியில் அ.தி.மு.க.வை சேர்ந்த சிலர் கூடியிருந்ததாகவும், அவர்களிடையே முன்னாள் அமைச்சர் ஜெயபால் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. தேர்தல் விதிமுறை மீறி அ.தி.மு.க.வினர் கூட்டம் நடத்துவதாக வந்த தகவலை தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அலுவலர் கமலராஜன், சஞ்சீவிராஜா, தலைமையிலான குழுவினர் அங்கு சென்றனர். அப்போது அதிகாரிகளை கண்டதும் அங்கு கூடியிருந்தவர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து தேர்தல் பறக்கும் படை அலுவலர் கமலராஜன், சஞ்சீவிராஜா ஆகியோர் திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்கார்த்திகுமார், இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் தேர்தல் விதிமுறை மீறி கூட்டம் நடத்தியதாக அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயபால் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ்விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்