குழந்தையின் இதய துடிப்பு, நலன் அறிய பயன்படும் கருவி குறித்து அரசு மருத்துவமனையில் கருத்தரங்கம்

தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் குழந்தையின் இதய துடிப்பு, நலன் அறிய பயன்படும் கருவி குறித்த கருத்தரங்கம் நடந்தது. இதனை தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதாலிங்கராஜ் தொடங்கி வைத்தார்.

Update: 2019-04-20 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் தாயின் கருப்பையில் இருக்கும் குழந்தைகள் இதய துடிப்பு மற்றும் நலன் அறிய பயன்படும் (சி.டி.ஜி.) கருவி குறித்த கருத்தரங்கம் நேற்று நடந்தது. இந்த கருத்தரங்கை தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

கருத்தரங்கில் துணை முதல்வர் ஆறுமுகம், துணை கண்காணிப்பாளர் குமரன், டாக்டர் அமுதவடிவு மற்றும் மகளிர் மகப்பேறு துறை தலைவி டாக்டர் ராஜராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கருத்தரங்கில் கருவியின் பயன்பாடு குறித்து ஐதராபாத் பெர்னாண்டஸ் மருத்துவமனையின் நிபுணத்துவம் பெற்ற மகப்பேறு மருத்துவ குழுவினரால் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த கருத்தரங்கில் தஞ்சை மருத்துவக்கல்லூரி, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை டாக்டர்கள், தனியார் மருத்துவமனை டாக்டர்கள் மருத்துவக்கல்லூரி இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

மேலும் செய்திகள்