ஆசிரியர் பற்றாக்குறை விரைவில் சரிசெய்யப்படும் அமைச்சர் கமலக்கண்ணன் பேட்டி

புதுவை மாநிலத்தில் ஆசிரியர் பற்றாக்குறை விரைவில் சரிசெய்யப்படும் என்று கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் கூறினார்.

Update: 2019-04-20 23:00 GMT
காரைக்கால்,

புதுச்சேரி மாநில மற்றும் மாவட்ட அளவில் அரசு பள்ளிகள் கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதல் தேர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது. அதாவது மாநில அளவில் புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 92.94 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் அரசு பள்ளிகள் 85.62 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 11.86 சதவீதம் கூடுதலாகும். இதற்காக அனைத்து ஆசிரியர்களையும் பாராட்டுகிறேன்.

காரைக்கால் மாவட்ட கிராமப்புற பள்ளிகளில் மாணவர்கள் தேர்வு எழுத பயந்து வீட்டில் இருந்துவிட்டனர். அவர்களை, ஆசிரியர்கள் வீடு தேடி சென்று அழைத்து வந்து ஊக்கமளித்து தேர்வு எழுதவைத்து நல்ல தேர்ச்சி வழங்கி இருப்பது பாராட்டத்தக்கது. மாநிலத்தில் உள்ள ஆசிரியர்கள் பற்றாக்குறை விரைவில் சரி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்