நெல்லை மாவட்டத்தில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

நெல்லை மாவட்டத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

Update: 2019-04-21 21:30 GMT
சங்கரன்கோவில், 

நெல்லை மாவட்டத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

ஈஸ்டர் பண்டிகை

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் புனித சூசையப்பர் ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவில் ஏராளமானோர் ஒன்று கூடி கையில் மெழுகுவர்த்திகளை ஏந்தி ஏசு உயிர்த்தெழுந்த நிகழ்வை கூறினர். தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் பாளையங்கோட்டை பள்ளிகளின் கண்காணிப்பாளர் வியாகப்பராஜ், சங்கரன்கோவில் வட்டார அதிபரும், பங்குதந்தையுமான சாக்கோவர்கீஸ் உள்பட திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

தேவர்குளம்

பனவடலிசத்திரம் அருகே உள்ள தேவர்குளத்தில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு முழு இரவு ஜெபம் சிறப்பு பிரார்த்தனை, ஆராதனை, அசனம் ஆகியவை நடைபெற்றது. அதேபோல் வடக்கு பனவடலிசத்திரம், ஆயாள்பட்டி, கொக்குகுளம், தெற்கு பனவடலிசத்திரம், சாலைப்புதூர், சாயமலை, மடத்துப்பட்டி, பெருமாள்பட்டி, தெற்கு புளியம்பட்டி, கூவாச்சிபட்டி, அடைக்கலாபுரம், குருக்கள்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்