நாம் தமிழர் கட்சி பூத் ஏஜென்ட் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்கு

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள அங்கனூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் வினோத்(வயது 29). இவர் கடந்த 18-ந் தேதி தேர்தல் அன்று நாம் தமிழர் கட்சி அங்கனூர் பூத்து ஏஜென்டாக இருந்தார்.

Update: 2019-04-21 22:15 GMT
செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள அங்கனூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் வினோத்(வயது 29). இவர் கடந்த 18-ந் தேதி தேர்தல் அன்று நாம் தமிழர் கட்சி அங்கனூர் பூத்து ஏஜென்டாக இருந்தார். அங்கே இருந்த வாக்குச்சாவடியில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வாக்கு அளித்தார். மேலும் அன்று அங்கு வந்த 17 வயதுடைய ஒரு சிறுவன் ஓட்டுப்போட வந்தார். சந்தேகம் அடைந்த வினோத் வாக்காளர் பட்டியலை சரி பார்த்தபோது கள்ள ஓட்டு போட முயன்றது தெரியவந்து. அதனை தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் அந்த சிறுவனை வெளியேற்றினர். இதனால் ஆத்திரமடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அஜித்குமார், அலெக்ஸ், அசோக்குமார், சஷ்டி ஆகியோர் நேற்று முன்தினம் வினோத் வீட்டிற்கு சென்று வீட்டின் கதவை சாத்திவிட்டு வினோத்தை சரமாரியாக தாக்கியுள்ளனர். அந்த வீட்டில் இருந்த பெண்கள் தடுக்க முயன்றபோது அந்த பெண்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த வினோத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாற்று சமூகத்தினர் திரண்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தளவாய் போலீசார் அவர்களை சமரசம் செய்தனர். இது தொடர்பாக வினோத் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்