புலிக்குத்தி அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

உத்தமபாளையம் அருகே உள்ள புலிக்குத்தி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் பல்லவி பல்தேவிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

Update: 2019-04-22 22:30 GMT
தேனி,

எங்கள் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் தற்போது 125 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு 425-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வந்தனர். தற்போது எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளது. இங்கு கடந்த 2014-15-ம் கல்வி ஆண்டில் இருந்து ஆங்கில வழிக்கல்வி செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், 15 மாணவர்களுக்கு குறைவானவர்கள் படிக்கும் வகுப்பில் உள்ளவர்களை வேறு பள்ளியில் சேர்க்குமாறு தெரிவிக்கின்றனர். மேலும் அடுத்த கல்வி ஆண்டு முதல் ஆங்கில வழிக்கல்விக்கு குறைந்த மாணவர்கள் இருந்தால் அந்த வகுப்பு செயல்படாது என்றும் பள்ளியில் கூறுகின்றனர். இங்கு மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். எனவே, மாணவ, மாணவிகள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து இங்கு ஆங்கில வழிக்கல்வி வகுப்புகள் இயங்க நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்