புதுச்சேரியில் கடல் சீற்றம் இன்றும் பலத்த காற்று வீசும்

புதுவையில் நேற்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இன்றும் கடலில் பலத்த காற்று வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2019-04-25 23:07 GMT
புதுச்சேரி,

இந்திய பெருங்கடல் பகுதியில் புயல் உருவாவது தொடர்பாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அந்த கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 29-ந்தேதி புயலாக உருவாகி வலுவடையும் என்றும் சென்னைக்கும், நாகப்பட்டினத்துக்கும் இடையில் இந்த புயல் கரையை கடக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து புதுவை மீனவர்கள் கடலுக்கு படகில் சென்று மீன்பிடிக்க வேண்டாம் என்று புதுச்சேரி அரசு அறிவுறுத்தியிருந்தது. கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் என்றும் கூறியிருந்தது.

அதேபோல் நேற்று புதுவை கடல் பகுதி கொந்தளிப்போடு காணப்பட்டது. கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

ஏற்கனவே மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில் கட்டுமரம், பைபர் படகுகளிலும் மீன்பிடிக்க செல்லாமல் அவற்றை கரையிலேயே நிறுத்தி இருந்தனர். இன்றும் (வெள்ளிக்கிழமை) கடலில் பலத்த காற்று வீசும் என்று மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் செய்திகள்