தனுஷ்கோடி கடற்கரையில் யுனெஸ்கோ சான்றிதழ் கல்வெட்டு

மன்னார்வளைகுடா உயிர்கோள காப்பகத்துக்கு யுனெஸ்கோ வழங்கிய சான்றிதழ் தனுஷ்கோடி கடற்கரையில் கல்வெட்டாக வைக்கப்பட்டு உள்ளது.

Update: 2019-05-05 23:00 GMT

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகு£ கடல் பகுதியில் குருசடைதீவு,சிங்கிலிதீவு,மனோலிதீவு,முயல்தீவு உள்ளிட்ட 21 தீவுகள் உள்ளன. பல அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் இந்த பகுதியில் உள்ளதால் தேசிய கடல்சார் பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மன்னார்வளைகுடா கடல்பகுதியில் உள்ள தீவு பகுதிகள் மற்றும் பவளப்பாறைகள், அரியவகை கடல்வாழ் உயிரினங்களை சிறப்பாக பாதுகாத்து பராமரித்து வருவதற்காக கடந்த 2001–ம் ஆண்டு யுனெஸ்கோவால் மனிதனும்,உயிர்கோளமும் என்ற அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட மன்னார் வளைகுடா உயிர்கோளகாப்பகத்திற்கு யுனெஸ்கோ சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த சான்றிதழை கடல் வாழ் உயிரினங்களை பாதுகாப்பதில் அதிக ஒத்துழைப்பு வழங்கி வரும் மீனவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்த்து தெரிந்துகொள்ளும் வகையில் தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம் அருகே உள்ள கடற்கரை மற்றும் பாம்பன் குந்துகால் கடற்கரை என 2 இடங்களில் கல்வெட்டாக வைக்கப்பட்டுள்ளது.அந்த கல்வெட்டில் கடல்குதிரை, டால்பின் போன்ற உயிரினங்களும் வடிவமைத்து அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்