சம்பளம் வழங்கக்கோரி பாசிக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சம்பளம் வழங்கக்கோரி பாசிக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-05-15 23:17 GMT

புதுச்சேரி,

புதுவை அரசு நிறுவனமான பாசிக்கில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 57 மாதத்துக்கான சம்பளம் நிலுவையில் உள்ளது. இந்த சம்பளத்தை வழங்கக்கோரி பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்கத்தினர் (ஏ.ஐ.டி.யு.சி.) பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அவர்கள் 5 மாத சம்பளத்தையாவது உடனடியாக வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாசிக் தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்.

ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவர் அபிஷேகம், பொதுச்செயலாளர் தினேஷ் பொன்னையா, பாசிக் சங்க கவுரவ தலைவர் சேதுசெல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் சங்க செயலாளர் முத்துராமன், பொருளாளர் தரணிராஜா, துணை செயலாளர்கள் கோவிந்தராஜ், மூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

57 மாதமாக சம்பளம் வழங்கப்படாததால் தங்கள் பிள்ளைகளை பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்க்க பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாக ஆர்ப்பாட்டத்தின்போது ஊழியர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்